Home
Mobile

அதிரவிடும் விலை.. 200எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. புது HONOR 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் ஹானர் 400 (HONOR 400) மற்றும் ஹானர் 400 ப்ரோ (HONOR 400 Pro) ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் 100W சார்ஜிங், சோனி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் 400 அம்சங்கள் (HONOR 400 specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் 400 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அதிரவிடும் விலை.. 200எம்பி கேமரா.. புது HONOR 5ஜி போன்கள் அறிமுகம்..

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் ஹானர் 400 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல் மேஜிக்ஓஎஸ் 9.0(MagicOS 9.0)மற்றும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

200எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 400 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் 50எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த புதிய ஹானர் 400 போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன.

5300mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ஹானர் 400 போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் போனில் உள்ளன.

ஹானர் 400 ப்ரோ அம்சங்கள் (HONOR 400 Pro specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல் மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

200எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ சோனி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 400 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் 50எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த புதிய ஹானர் 400 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன.

அதிரவிடும் விலை.. 200எம்பி கேமரா.. புது HONOR 5ஜி போன்கள் அறிமுகம்..

5300எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ஹானர் 400 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் போனில் உள்ளன.

தற்போது இந்த இரண்டு ஹானர் போன்களும் ஐரோப்பாவில் விற்பனைக்கு வந்துள்ளன. விரைவில் இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹானர் 400 போனின் ஆரம்ப விலை ரூ.48,485-ஆக உள்ளது. பின்பு ஹானர் 400 ப்ரோ போனின் ஆரம்ப விலை ரூ.77,635-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 400 and HONOR 400 Pro launched in the global market: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X