அட்டகாச அம்சங்களோடு Honor 30i: விலை மற்றும் அம்சங்கள்!

|

Honor 30i ஸ்மார்ட்போன் 6.3 அங்குல ஓஎல்இடி டிஸ்ப்ளே, 48 எம்.பி பிரதான கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்களோடு அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்

ஹானர் 30 சீரிஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹானர் அறிமுகப்படுத்திய முதன்மைரக ஸ்மார்ட்போன் ஆகும். இதன் வரிசையில் தற்போது புதிய மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய சாதனம் ரஷ்யாவில் ஹானர் 30ஐ என பெயருடன் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் முழுஹெச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.

ஹானர் 30i: அம்சங்கள்

ஹானர் 30i: அம்சங்கள்

ஹானர் 30i ஸ்மார்ட்போன் இன்-ஹவுஸ் ஹிலிகின் கிரின் 710 எஃப் சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்போடு வருகிறது. மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக சேமிப்பகத்தை விரிவுபடுத்துவதற்கான சிறப்பு ஸ்லாட் வசதியும் இதில் உள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

6.3 அங்குல ஓஎல்இடி டிஸ்ப்ளே

6.3 அங்குல ஓஎல்இடி டிஸ்ப்ளே

ஹானர் 30i ஸ்மார்ட்போனில் மற்றொரு முக்கிய அம்சம் 6.3 அங்குல ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆகும். இந்த காட்சி FHD + தெளிவுத்திறனுடன் வருகிறது. செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்கான காட்சியில் வாட்டர் டிராப் 16 எம்.பி முன் கேமராவுடன் வருகிறது.

பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு

பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு

ஹானர் 30i ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இந்த சாதனம் 48 எம்.பி முதன்மை சென்சார், 8 எம்.பி சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதோடு 2MP பின்புற கேமரா அமைப்பு ஆகியவை உள்ளது. ஹானர் 30i யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது.

மொபைல் மூலம் சிக்கிய கணவன்: அம்பலமான உண்மைமுகம்., ஸ்கெட்ச் போட்ட மனைவி!

4,000 mAh பேட்டரி

4,000 mAh பேட்டரி

சாதனத்தின் பிற்புறத்தில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது. ஹானர் சாதனத்தில் 4,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்யும் வகையிலான் அம்சம் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.

ஹானர் 30i: விலை

ஹானர் 30i: விலை

ஹானர் 30i ஸ்மார்ட்போனின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17,600 ரூபாய் என அறிமுகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாதனமானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. சாதனம் மிட்நைட் பிளாக், பச்சை / டர்க்கைஸ் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. உலகின் பிற சந்தையில் இந்த சாதனம் எப்போது அறிமுகமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor 30i Launched with 6.3 OLED Display and 48 MP Camera: Here the Price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X