நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி.. HONOR 300 பெயரை சொல்லுது பட்டிதொட்டி.. அப்படி என்னப்பா இருக்கு இந்த Mobile-ல?
ஹானர் (HONOR) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஹானர் 300 சீரிஸ் (HONOR 300 Series) மாடல்களின் வடிவமைப்பு தோற்றத்தை இன்று உலகிற்கு காண்பித்துள்ளது. இந்த புதிய HONOR 300 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு இன்னும் கொஞ்ச திட்டங்களே உள்ள நிலையில், ஹானர் 300 போன்களின் டிஸைனுடன் (design), சில முக்கிய விபரக்குறிப்பு (specification details) தகவல்களையும் ஹானர் வெளியிட்டு ரசிகர்களை டீஸ் (tease) செய்துள்ளது. இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்று விபரங்கள் இதோ.
HONOR நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் இந்த புதிய வரிசையில் நாம் ஹானர் 300 (HONOR 300) மற்றும் ஹானர் 300 ப்ரோ (HONOR 300 Pro) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம் என்பதை நிறுவனத்தின் புதிய டீஸர் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஹானர் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டீஸர் தகவலில் வரவிருக்கும் போனின் ரேம் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட் (Storage variant) விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹானர் 300 (HONOR 300) மற்றும் ஹானர் 300 ப்ரோ (HONOR 300 Pro):
இத்துடன் நிறுவனம் HONOR 300 மாடல்களுக்கான ப்ரீ-புக்கிங்கையும் (pre-reservations) துவங்கியுள்ளது. சரி நேரடியாக விஷயத்திற்கு செல்லலாம், நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, ஹானர் 300 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் 12GB+256GB, 12GB+512GB, மற்றும் 16GB+512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. HONOR 300 Pro சாதனம் ராக் பிளாக் (Rock Black), டீ க்ரீன் (Tea Green), மற்றும் ஸ்டர்லைட் சாண்டு (Starlight Sand) நிறங்களில் வெளிவரும்.
HONOR 300 Pro சாதனம் ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, HONOR 300 சாதனம், லுயன் பர்பிள் (Luyan Purple), மோயன் பிளாக் (Moyan Black), சக்க க்ரீன் (Chaka Green), காங்க்ஷன் க்ரேய் (Cangshan Gray), மற்றும் யுளங் ஸ்னோவ் (Yulong Snow) நிறங்களில் 8GB + 256GB, 12GB+256GB, 12GB+512GB, மற்றும் 16GB+512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆக வெளிவரும்.
ஹானர் 300 (HONOR 300) மற்றும் ஹானர் 300 ப்ரோ (HONOR 300 Pro) அம்சங்கள்:
வெளியான தகவலின் படி, ஹானர் 300 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனங்கள் 1.5K குவாலிட்டி கொண்ட OLED டிஸ்பிளேவை (display) கொண்டிருக்கும். ஹானர் 300 ப்ரோ (HONOR 300 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 SoC) உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஹானர் 300 சாதனம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் (Snapdragon 7 Gen SoC) சிப்செட்டை கொண்டிருக்கும்.
இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனங்கள் 100W சூப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இது அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற அம்சங்களை நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று கூறியுள்ளது. இந்த போன் பற்றிய கூடுதல் விபரங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications