மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
பின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம்.
பின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனத்தின்
தலைவர் தகவல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலின் இந்திய விலை ரூ.16,586-ஆக உள்ளது, பின்பு ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் விற்பினைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின்
பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் 20ஐ:
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது அந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கிரிண் 710:
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் கிரிண் 710 கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 24எம்பி + 8எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, பின்பு எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

பேட்டரி:
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் 3400எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ப்ளூடூத் 4.2, வைபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications