ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
ஹானர் நிறுவனத்தின் ஹானர் 20ஐ (மிட்நைட் பிளாக்) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதுவும் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே இந்த விலைகுறைப்பு செல்லுபடியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் இந்த ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்பமுடியாத விலைகுறைப்பு
ஹானர் 20ஐ (மிட்நைட் பிளாக்) ஸ்மார்ட்போனின் முந்தயை விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் 20ஐ டிஸ்பிளே
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது அந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கிரிண் 710 கார்டெக்ஸ்
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் கிரிண் 710 கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் 20ஐ கேமரா
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 24எம்பி + 8எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் 32எம்பி செல்பீ கேமராஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, பின்பு எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 20ஐ பேட்டரி
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் 3400எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ப்ளூடூத் 4.2, வைபை, ஜிபிஎஸ், மைக்ரோயுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications