புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன்.!
ஹானர் நிறுவனம் அறிமுகம் செய்த ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் பாண்டம் சிவப்பு நிறத்தில் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம்
செய்துள்ளது அந்நிறுவனம்.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் 20ஐ டிஸ்பிளே
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் திர்மானம்
மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது அந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கிரிண் 710 கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி சிப்செட்
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் கிரிண் 710 கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு அம்சம்
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 24எம்பி + 8எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, பின்பு எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெமரி நீட்டிப்பு ஆதரவு
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி
வசதியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

ஹானர் 20ஐ பேட்டரி
ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் 3400எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ப்ளூடூத் 4.2, வைபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications