செய்கைனா இதுதான்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே, 50X டிஜிட்டல் ஜூமிங் கொண்ட சோனி சென்சார் கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் கொண்ட ஹானர் 200 (HONOR 200) போனானது, இந்தியாவில் வெளியாகிறது. சினிமாடிக் போட்டோகிராபி அவுட்புட் கொடுக்கும் இந்த ஹானர் 200 போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
இந்த ஹானர் 200 போனானது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி கேமரா பிரியர்களை அறக்க பறக்க செய்தது. மெயின் கேமரா மட்டுமல்லாமல், டெலிபோட்டோ மற்றும் செல்பீ ஷூட்டரிலும் சோனி சென்சாருடன் பட்டையை கிளப்பியது. இந்தியாவில் எப்போது வெளியாகும் என்று ஹானர் பிரியர்கள் வெயிட்டிங் மோடில் இருந்தனர். இப்போது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.

அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவது உறுதியாவிட்டது. மேலும், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் சினிமாடிக் போட்டோகிராபி கேமரா ஆகியவை வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. குளோபல் வேரியண்ட்டின் பீச்சர்களே இந்த போனில் வரும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, அதை பார்ப்போம்.
ஹானர் 200 அம்சங்கள் (HONOR 200 Specifications): இந்த ஹானர் மாடலில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட அல்ட்ரா பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. மெயின் மற்றும் டெலிபோட்டோவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வருகிறது.
இதுபோக மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சாரும், டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. டெலிபோட்டோவில் 50X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 2.5X ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. மெயின் கேமராவில் 4K வீடியோ ஷூட் உள்ளது.

50 எம்பி செல்பீ ஷூட்டரில் சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் வருகிறது. இந்த கேமராவானது, போர்ட்ராய்டு அவுட்புட் கொடுக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஏஐ போர்ட்ராய்டு என்ஜின் (AI Portrait Engine), நைட் போர்ட்ராய்டு மோட் (Night Portrait Mode) மற்றும் மல்டிபிள் லைட்னிங் எஃபெக்ட்ஸ் (Multiple Lighting Effects) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
கேமராவை போலவே டிஸ்பிளே பீச்சர்களும் மிரளவிடுகிறது. ஆகவே, 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் (Quad Curved Display) வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், மேஜிக்ஓஎஸ் 8.0 கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. 100W ஃபாஸ்ட் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வருகிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.45,180ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலின் விலை ரூ.53,610ஆகவும் இருக்கிறது. இது குளோபல் வேரியண்ட்களின் விலையாகும். இதே விலை மற்றும் பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இப்போது, அமேசானில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டிருப்பதால், அடுத்த வரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








