யாரு சாமி அவன்.. SONY கேமரா.. QUAD டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. 50X ஜூமிங்.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?
சோனி சென்சார் கேமரா, 50X டிஜிட்டல் ஜூமிங், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 5200mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஹானர் 200 (HONOR 200) போன் குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. ஏஐ போர்ட்ராய்டு என்ஜின் மற்றும் 7.7 மிமீ ஸ்லிம் டிசைன் போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த ஹானர் 200 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் 200 அம்சங்கள் (HONOR 200 Specifications): இந்த ஹானர் போனில் 6.7 இன்ச் (2664 × 1200 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் ஓஎல்இடி (Quad Curved OLED Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், பி3 கலர் காமட், 4,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) வருகிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.
டூயல் ஓஐஎஸ் (Dual OIS) சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவிலும், 50 எம்பி டெலிபோட்டோ கேமராவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வருகிறது. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 50X டிஜிட்டல் ஜூமிங் உள்ளது.
2.5X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சாரும், டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) சென்சாரும் வருகிறது. ஆகவே, போட்டோகிராபி அவுட்புட் அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.

50 எம்பி போர்ட்ராய்டு செல்பீ கேமரா (Portrait Selfie Camera) வருகிறது. இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் வருகிறது. போர்ட்ராய்டு அவுட்புட் கொடுக்க ஏஐ போர்ட்ராய்டு என்ஜின் (AI Portrait Engine) சப்போர்ட் வருகிறது. ஆகவே, போர்ட்ராய்டுக்கு ஏற்ப லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்ட் ஆட்டோவாக பேலன்ஸ் செய்யப்படும்.
மல்டிபிள் லைட்னிங் எஃபெக்ட்ஸ் (Multiple Lighting Effects), நைட் போர்ட்ராய்டு மோட் (Night Portrait Mode), எச்டிஆர் டூயல் ஸ்டைல் (HDR Dual Style) உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன. இந்த ஹானர் 200 போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன.
100W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperCharge Fast Charging) கொண்ட 5200mAh பேட்டரி வருகிறது. இருப்பினும், 7.7 மிமீ மட்டுமே தடிமன் கொண்டிருக்கிறது. 187 கிராம் எடை உள்ளது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் பாடியில் எதிர்பார்க்கலாம். அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.
இந்த ஹானர் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.45,180ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலின் விலை ரூ.53,610ஆகவும் இருக்கிறது. இந்த போனின் குளோபல் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் முதலில் விற்பனைக்கு வருகிறது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications