விஸ்வரூப விற்பனை.. ரூ.8000 விலை குறைப்பு.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) சோனி சென்சார் கொண்ட டெலிபோட்டோ கேமரா, குவாட் கர்வ்ட் டிசைன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 100W சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரி, 12 ஜிபி ரோம் மற்றும் 512 ஜிபி மெமரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஹானர் 200 ப்ரோ (HONOR 200 Pro) போனுக்கு முழுதாக ரூ.8000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ஆரம்ப விலை அடிமட்ட பட்ஜெட்டுக்கு வந்துள்ளது. இந்த ஹானர் போனின் முழு விவரங்கள் இதோ.
ஹானர் 200 ப்ரோ அம்சங்கள் (HONOR 200 Pro Specifications): இந்த ஹானரில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. 6.78 இன்ச் (2700 × 1224 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் ப்ளோட்டிங் அமோலெட் (Quad Curved Floating AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளது.
இந்த ஹானர் 200 ப்ரோ போனில் அல்ட்ரா பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50எச் (OmniVision OV50H) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) வருகிறது.
அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) சென்சார் வருகிறது. இந்த கேமராவிலும் ஓஐஎஸ் (OIS) வருகிறது. மேலும், 2.5X ஆப்டிகல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 50 எம்பி 3டி டெப்த் செல்பீ கேமரா வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் உள்ளது.

கேமராவை போலவே அல்ட்ரா பிரீமியமாக பேட்டரி சிஸ்டம் வருகிறது. 100W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 66W வயர்லெஸ் சூப்பர்சார்ஜ் சப்போர்ட் உள்ளது. பேட்டரி உடன் 8.2 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை உள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த ஹானர் 200 ப்ரோ போனில் ஓசன் சியான் (Ocean Cyan) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் 12 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.57,998ஆக இருக்கிறது.
ஆனால், அமேசான் விற்பனையில் ரூ.5000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.8000 விலை குறைப்பில் இந்த மாடலை வாங்கி கொள்ளலாம். பேங்க் டிஸ்கவுண்ட் குறிப்பிட்ட கார்டுகளுக்கு மட்டுமல்லாமல், மல்டிபிள் பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ரூ.49,998 பட்ஜெட்டில் இந்த ஹானர் 200 ப்ரோ போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








