அழகு அள்ளுதே.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா..OLED டிஸ்பிளே.. புதிய Honor போன் ரெடி.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஹானர் 200 ப்ரோ (Honor 200 Pro) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஹானர் 200 ப்ரோ படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதுவும் தனித்துவமான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஹானர் போன். குறிப்பாக லைட் கிரீன் (light green), கிரே (grey), ப்ளூ (Blue) நிறங்களில் இந்த புதிய ஹானர் 200 ப்ரோ போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 200 ப்ரோ அம்சங்கள் (Honor 200 Pro specifications): குவாட்-கர்வ்ட் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே ( quad-curved 1.5K OLED display) வசதியுடன் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக ஹானர் 200 ப்ரோ போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.
ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட்.
50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிப்ளி ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே டூயல் செல்பி கேமரா ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் இந்த போனின் கேமராக்கள் 50X டிஜிட்டல் ஜூம் ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே தொலைவில் உள்ள பொருட்களை கூட தெளிவாக படம் பிடிக்க முடியும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் கேமரா அமைப்பு மற்றும் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில இந்த ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இன்-டிஸ்பிேளை கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவரும் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன்.
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 5ஜி ஆதரவு, ஜிபிஎஸ், வைஃபை உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹானர் 200 ப்ரோ போன் வெளிவரும். அதேபோல் ஹானர் 200 ப்ரோ போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








