Home
Mobile

கூவி, கூவி விற்கும் அமேசான்.. 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் Honor 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஹானர் 200 லைட் 5ஜி (HONOR 200 Lite 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 108எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ஹானர் 200 லைட் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது அமேசான் தளத்தில் ஹானர் 200 லைட் 5ஜி போனுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் வழங்கப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.16998 விலையில் வாங்கிவிட முடியும்.

கூவி, கூவி விற்கும் அமேசான்.. ஆஃபரில் Honor 5ஜி போன்.. எந்த மாடல்?

ஹானர் 200 லைட் 5ஜி அம்சங்கள் (Honor 200 Lite 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் (Dimensity 6080 chipset) உடன் ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் 200 லைட் 5ஜி ஆனது 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

MagicOS 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த புதிய போன் SGS 5-ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது. தற்செயலாக கீழே விழுவதைத் தாங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

கூவி, கூவி விற்கும் அமேசான்.. ஆஃபரில் Honor 5ஜி போன்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த போன். பின்பு யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio),
பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 802.11ax), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 200 Lite 5G with 8gb ram price slashed on amazon check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X