நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Honor 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 108MP கேமரா.. 35W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் நாளை (செப்டம்பர் 19) ஹானர் 200 லைட் 5ஜி (Honor 200 Lite 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. 108எம்பி கேமரா, 35W சார்ஜிங், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஹானர் 200 லைட் 5ஜி அம்சங்கள் (Honor 200 Lite 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3240Hz PWM டிமிங்கிற்கான ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் 200 லைட் 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
எனவே இந்த ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் (Dimensity 6080 chipset) உடன் ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
MagicOS 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த புதிய போன்ளுபுளு 5-ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது. தற்செயலாக கீழே விழுவதைத் தாங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் எடை 166 கிராம் ஆகும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஸ்டாரி ப்ளூ (Starry Blue), சியான் லேக் (Cyan Lake) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய நிறங்களில் இந்த போன் வெளிவரும். குறிப்பாக ரூ.25,000-க்கு கீழ் இந்த புதிய ஹானர் 200 லைட் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகமாகும். பின்பு அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications