ஆரம்பமே ரூ.2000 ஆஃபர்.. 108MP கேமரா.. 35W சார்ஜிங்.. அறிமுகமானது புது Honor 5ஜி போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் இந்தியாவில் இன்று ஹானர் 200 லைட் 5ஜி (Honor 200 Lite 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 108எம்பி கேமரா, 35W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஹானர் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் 200 லைட் 5ஜி அம்சங்கள் (Honor 200 Lite 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED)டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840Hz PWM டிமிங்கிற்கான ஆதரவு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் 200 லைட் 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் (Dimensity 6080 chipset) உடன் ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
அதேபோல் MagicOS 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த புதிய போன் SGS 5-ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது. தற்செயலாக கீழே விழுவதைத் தாங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த போன். பின்பு யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

4500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 802.11ax), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ஹானர் 200 லைட் 5ஜி போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. ஸ்டாரி ப்ளூ (Starry Blue), சியான் லேக் (Cyan Lake) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்கலாம். வரும் செப்டம்பர் 26-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.15,999 விலையில் இந்த புதிய ஹானர் போனை வாங்கவிட முடியும்.


Click it and Unblock the Notifications








