Home
Mobile

166 கிராமில் 16GB ரேம், 6.7-இன்ச் AMOLED, 108MP ரியர், 50MP செல்பீ! பேரு Honor 200 Lite ஆனா Phone-னு வெயிட்டு!

HONOR 200 Lite 5G: பெயரில் தான் "லைட்டு" ஆனால் உண்மையில் இது "வெயிட்டு" என்று கூறும்படியான அம்சங்களுடன்.. கடந்த மே 2024-ல் சீனாவில் அறிமுகமான ஒரு ஸ்மார்ட்போன் தான் - ஹானர் 200 லைட் 5ஜி. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி (India Launch Date) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இதோடு சேர்ந்து அறிமுகமான ஹானர் 200 5ஜி (Honor 200 5G) மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி (Honor 200 Pro 5G)ஆகிய 2 மாடல்களுமே இந்திய சந்தையில் அறிமுகமாகி விட்டன.

ஆனால் 'லைட் வேரியண்ட்' மட்டும் வராமலேயே இருந்தது. தற்போது அதுவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் சரியாக எந்த தேதியில் இந்தியாவில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? ஹானர் 200 சீரீஸின் கீழ் இருக்கும் மற்ற மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

பேரு Honor 200 Lite.. ஆனா Phone-னு வெயிட்டு!

ஹானர் 200 லைட் 5ஜி எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? ஹானர் 200 சீரிஸின் கீழ் "கடைக்குட்டி" மாடல் ஆன ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன், வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் அறிமுகமானதை போலவே, இந்தியாவிலும் ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்டாரி ப்ளூ (Starry Blue), சியான் லேக் (Cyan Lake) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும். அறிமுகத்திற்கு பின்னர் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் மெயின்லைன் ஸ்டோர்களின் வழியாக விற்பனைக்கு வரும்.

ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்கள் இடம்பெறும்? இந்த ஸ்மார்ட்போனின் ஹைலைட்டே இதன் கேமராக்கள் தான். இது 108எம்பி ப்ரைமரி கேமரா (எப்/1.75 அபெர்க்ஷர்) + எப்/2.2 அபெர்க்ஷர் உடனான வைட் & டெப்த் கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

ஹானரின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனால் 1எக்ஸ் என்விராயன்மென்டல் போர்ட்ரெயிட், 2எக்ஸ்அட்மாஸ்பியரிக் போர்ட்ரெயிட் மற்றும் 3எக்ஸ் க்லோஸ்-அப் போர்ட்ரெயிட் ஆகியவற்றை கேப்சர் செய்ய முடியும். முன்பக்கத்தில் இது 50எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. இதில் ஏஐ வைட்-ஆங்கிள் செல்பீ செயல்பாடு உள்ளது. இதன்கீழ் க்ரூப் செல்ஃபிகளுக்காக 90° ஃபீல்ட் ஆஃப் வியூக்கு மாற முடியும். கூடவே ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் செல்பீ லைட்டும் உள்ளது.

டிஸ்பிளேவை இது 3240Hz PWM டிமிங்கிற்கான ஆதரவு கொண்ட 6.7 இன்ச் AMOLED சன்லைட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அளவீட்டில் 6.78மிமீ தடிமன் மற்றும் எடையில் 166 கிராம் உள்ள இந்த ஸ்மார்ட்போன் தினசரி தேய்மானம் மற்றும் தற்செயலாக கீழே விழுவதை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹானரின் கூற்றுப்படி இது SGS 5-ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழை பெற்றுள்ளது.

ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்திய சந்தையில் இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அடுத்த வாரம் இந்த போன் அறிமுகப்படுத்தப்படும் போது சரியான விலையை நாம் தெரிந்து கொள்வோம்.

ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும் வாங்க கிடைக்கிறது. ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 200 Lite 5G India Launch Date confirmed September 19 Price Specs All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X