ஜூன் 12 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வருகிறது புதிய Honor போன்..
ஹானர் (Honor) நிறுவனம் சமீபத்தில் தான் சீனாவில் ஹானர் 200 சீரிஸ் (Honor 200 series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய ஹானர் 200 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது சீனாவில் ஹானர் 200 (Honor 200) மற்றும் ஹானர் 200 ப்ரோ (Honor 200 Pro) ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு போன்களும் வரும் ஜூன் 12-ம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் சார்பில் டீசர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இந்த இரண்டு போன்களின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு இருக்கும். சரி இப்போது இந்த இரண்டு போன்களின் அம்சங்கள் இப்போது பார்க்கலாம்.
ஹானர் 200 அம்சங்கள் (HONOR 200 specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி கர்வ்ட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு2664×1200 பிக்சல்ஸ், 4000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut), 3840Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz high-frequency PWM dimming) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
அதேபோல ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட், MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5200எம்ஏஎச் பேட்டரி, 100 வாட்ஸ் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட அம்சங்கள் ஹானர் 200 போனில் உள்ளன.
50எம்பி OmniVision OV50H சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஹானர் 200 போன். மேலும் இந்த போனில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906)+ 3டி டெப்த் கேமரா என்கிற டூயல் செல்பி கேமராவும் இதில் உள்ளன.
ஹானர் 200 ப்ரோ அம்சங்கள் (HONOR 200 Pro specifications): இந்த போனிலும் 6.78-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வசதி உள்ளது. 4000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz high-frequency PWM dimming),100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3), MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 5200எம்ஏஎச் பேட்டரி, 100 வாட்ஸ் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி போன்ற அம்சங்கள் ஹானர் 200 ப்ரோ போனில் உள்ளன.

50எம்பி OmniVision OV50H சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஹானர் 200 ப்ரோ. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் + 3டி டெப்த் கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹானர் 200 ஸ்மார்ட்போன் ரூ.30,975 விலையிலும், ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.43,145 விலையிலும் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications