யாருமே எதிர்பார்க்கல.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போன்களை அறிமுகம் செய்த HONOR.. எந்த மாடல்?
ஹானர் (HONOR) நிறுவனம் தனது ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் 200 அம்சங்கள் (HONOR 200 specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி கர்வ்ட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2664×1200 பிக்சல்ஸ், 4000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut), 3840Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz high-frequency PWM dimming) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட், MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5200எம்ஏஎச் பேட்டரி, 100 வாட்ஸ் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது ஹானர் 200 போன்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி OmniVision OV50H சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் 200 . பின்பு இந்த ரியர் கேமராக்கள் 4கே வீடியோக்களை பதிவு செய்யும். மேலும் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906)+ 3டி டெப்த் கேமரா என்கிற செல்பி கேமராக்கள் இந்த போனில் உள்ளன.

ஹானர் 200 ப்ரோ அம்சங்கள் (HONOR 200 Pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. 4000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz high-frequency PWM dimming),100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3), MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 5200எம்ஏஎச் பேட்டரி, 100 வாட்ஸ் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி போன்ற அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி OmniVision OV50H சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் 200 ப்ரோ. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் + 3டி டெப்த் கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இந்த போனில் உள்ளது.
தற்போது ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த போன்கள் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஹானர் 200 போனின் ஆரம்ப விலை 2699 yuan (இந்திய மதிப்பில் ரூ.30,975)-ஆக உள்ளது. அதேபோல் ஹானர் 200 ப்ரோ போனின் ஆரம்ப விலை 3499 yuan (இந்திய மதிப்பில் ரூ.43,145)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








