Home
Mobile

ஜூலை 18 உறுதி.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புதிய HONOR போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வரும் ஜூலை 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட், ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன்கள் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போன்களின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஜூலை 18 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய HONOR போன்.. எந்த மாடல்?

ஹானர் 200 அம்சங்கள்(HONOR 200 specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி கர்வ்ட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 2664×1200 பிக்சல்ஸ், 4000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut), 3840Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz high-frequency PWM dimming) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட், MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5200எம்ஏஎச் பேட்டரி, 100 வாட்ஸ் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது ஹானர் 200 போன்.

குறிப்பாக OIS ஆதரவு கொண்ட 50எம்பி OmniVision OV50H சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் 200. பின்பு இந்த ரியர் கேமராக்கள் 4கே வீடியோக்களை பதிவு செய்யும். மேலும் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906)+ 3டி டெப்த் கேமரா என்கிற செல்பி கேமராக்கள் இந்த போனில் உள்ளன.

ஹானர் 200 ப்ரோ அம்சங்கள் (HONOR 200 Pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது இந்த போன். மேலும்4000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz high-frequency PWM dimming),100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன்.

குறிப்பாக ஹானர் 200 ப்ரோ போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3), MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 5200எம்ஏஎச் பேட்டரி, 100 வாட்ஸ் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன.

ஜூலை 18 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய HONOR போன்.. எந்த மாடல்?

மேலும் OIS ஆதரவு கொண்ட 50எம்பி OmniVision OV50H சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் 200 ப்ரோ. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் + 3டி டெப்த் கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இந்த போனில் உள்ளது.

இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த புதிய போன்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 200 and HONOR 200 Pro India launch date announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X