பொசுக்குனு போச்சே... ரூ.15,001 விலை குறைப்பு.. 100W சார்ஜிங்.. 5200mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஹானர் 200 5ஜி (HONOR 200 5G) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது. இதுவரையில் கிடைக்காதபடி ரூ.15,001 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 5200mAh பேட்டரி மற்றும் 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் பிரீமியம் காட்டுகிறது. இந்த ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலானது ரூ.19,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதேபோல 512 ஜிபி மாடலானது ரூ.28,990 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

ஆகவே, மொத்தமாக ரூ.15,001 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். இது கிட்டத்தட்ட பாதிக்கு மேல் விலை குறைப்பில் இருக்கிறது. இந்த ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனை மூன்லைட் ஒயிட் (Moonlight White) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது, கேமரா, டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஹானர் 200 5ஜி அம்சங்கள் (HONOR 200 5G Specifications): இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. இதற்கு 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. அதேபோல 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.
இந்த சிப்செட்டுக்கு ஏற்ப ம் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு மட்டுமல்லாமல், இன்டர்நெட் மற்றும் டெலி கம்யூனிகேஷன் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க கூடுதலாக சிப் சி1பிளஸ் (Chip C1+) கிடைக்கிறது. மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்பிளேவில் மிட்-பிரீமியம் காட்டி இருக்கிறது.
ஏனென்றால், 4,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் (2664 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த குவாட் கர்வ்ட் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக எச்டிஆர் விவிட் (HDR Vivid) மற்றும் 435 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
மேலும், ஹைப்பர்-டைனாமிக் கலர் (Hyper-dynamic Colour) டெக்னாலஜி மற்றும் வெட் டச் (Wet Hand) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சியை இந்த ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) கிடைக்கிறது.
12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது. இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்856 (Sony IMX856) சென்சார் மற்றும் மெயின் கேமராவில் கிடைத்ததை போலவே ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 50X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
இந்த ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனில் சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சாருடன் கூடிய 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








