Honor 200 5G மற்றும் Honor 200 Pro 5G இந்தியாவில் அறிமுகமானது! என்ன விலை? எப்போது முதல் விற்பனை?
கம்பேக் கொடுத்தா இப்படி கொடுக்கனும் என்கிற அளவிற்கு.. ஹானர் நிறுவனமானது 2 தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அறிவிக்கப்பட்டபடியே ஹானர் 200 சீரீஸ் 5ஜி (Honor 200 5G Series) ஸ்மார்ட்போன்கள் இன்று (ஜூலை 18) இந்திய சந்தையில் அறிமுகமாகின. இந்த சீரிஸின் கீழ் ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி என்கிற 2 மாடல்கள் உள்ளன. இவ்விரு மாடல்களின் விலை என்ன? அம்சங்கள் என்ன? இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:
ஹானர் 200 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் FHD+ OLED கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது, அதே சமயம் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்று பெரிய 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உள்ளது. மேலும் இரண்டுமே ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 8.0 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) உடன் அனுப்பப்படுகின்றன.
கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியாத் கேமராவுடன், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஆனால் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் சோனி IMX906 ப்ரைமரி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, ப்ரோ மாடலில் எச்9000 ப்ரைமரி சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளன. ஆனால் ப்ரோ வேரியண்டில் செல்பீ கேமராவுடன் கூடுதலாக 3டி டெப்த் கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆனால் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 66W வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் செய்வதற்கான ஆதரவு உள்ளது.

ஹானர் 200 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்து
மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆன ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.57,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது பிளாக் மற்றும் மூன்லைட் ஒயிட் கலர்களில் வருகிறது, அதே ப்ரோ வேரியண்ட் ஆனது பிளாக் மற்றும் ஓஷன் சியான் ஷேட்களில் வருகிறது.
இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி (நள்ளிரவு) முதல் அமேசான் இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் வழியாக விற்பனைக்கு கிடைக்கும். ஜூலை 20 மற்றும் ஜூலை 21 ஆம் தேதிகளில் நடைபெறும் அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ஹானர் 200 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீது சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்றும் ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட தேதிகளில் அமேசான் வழியாக ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 வரையிலான தள்ளுபடியை பெறுவார்கள் இதுதவிர்த்து வேறு சில நிபந்தனை சலுகைகளின் கீழ் ரூ.8000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுட்டையும் பெறலாம் மற்றும் ரூ.8499 வரையிலான இலவச ஹானர் ஆக்சஸரீஸ்களையும் பெறலாம்.


Click it and Unblock the Notifications








