Home
Mobile

அசத்துறானே! Update வழியாக புதுப்புது AI அம்சங்களை அனுப்பிய Honor நிறுவனம்.. எந்தெந்த Phone-களுக்கு கிடைக்கும்?

Honor MR2 Update: கூகுள் (தனது பிக்சல் 9 சீரிஸ் மாடல்களில்) மற்றும் ஆப்பிள் (தனது ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில்) நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களில், புத்தம் புது ஏஐ அம்சங்களை அறிமுகம் செய்து வரும் வேளையில்.. சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹானர் நிறுவனம், புதிய அப்டேட் வழியாக அதன் 2 லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய ஏஐ அம்சங்களை (New AI Features) அனுப்பியுள்ளது. அதென்ன ஏஐ அம்சங்கள்? இவைகள் எந்தெந்த ஹானர் போன்களுக்கு வந்துள்ளது? இதோ விவரங்கள்:

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான ஹானர் 200 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தான் ஹானர் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை பெற்றுள்ளன. ஹானர் நிறுவனம் தனது சமீபத்திய அப்டேட்டை எம்ஆர்2 அப்டேட் (MR2 Update) என்று அழைக்கிறது. இதன்கீழ், மேற்குறிப்பிட்ட 2 மாடல்களுக்கும் - ஏஐ ஏரேசர் (AI Eraser) மற்றும் பேஸ்-டூ-பேஸ் டிரான்ஸ்லேஷன் (Face-to-Face Translation) போன்ற ஏஐ அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Update வழியாக புதுப்புது AI அம்சங்களை அனுப்பிய Honor நிறுவனம்!

பெயர் குறிப்பிடுவது போலவே, ஏஐ ஏரேசர் என்பது புகைப்படங்களிலிருந்து தேவையற்ற பொருள்கள், உரைகள் அல்லது பின்னணி கூறுகளை அகற்ற உதவும் ஒரு அம்சமாகும். இது கூகுள் கிளவுட்டின் ஜெனரேட்டிவ் ஏஐ திறன்களால் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.இதோடு பல மொழிகளுக்கு நிகழ்நேர மொழிபெயர்ப்பை வழங்கும் பேஸ்-டூ-பேஸ் டிரான்ஸ்லேஷன் அம்சமும் வருகிறது.

மேலும் இந்த எம்ஆர்2 அப்டேட் ஆனது யூஎஸ்பி இணைப்பு தொடர்பான பாதுகாப்பு மேம்பாடுகளையும் கொண்டு வருகிறது. யூஎஸ்பி வழியாக பிசி அல்லது பிற இணக்கமான டிவைஸ் உடன் இணைக்கப்படும்போது, ​​சார்ஜ் செய்வதிலிருந்து டேட்டா பரிமாற்ற முறைகளுக்கு மாறும்போது, இனிமேல் பயனர் அங்கீகாரம் தேவைப்படும்

ஹானரின் இந்த அப்டேட், செப்டம்பர் 2024 கூகுள் செக்யூரிட்டி பேட்ச் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது இது புதிய ஏஐ அம்சங்களோடு சேர்த்து, ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிடப்பட்ட பாதுகாப்பு மேம்பாடுகளையும் கொண்டுவருகிறது. கூடுதலாக, இது ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ ஆகியவற்றிற்கான செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளையும் தொகுக்கிறது.

ஹானரின் எம்ஆர்2 அப்டேட்டை எவ்வாறு பெறுவது? காணார் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வைத்து இருக்கும் அனைத்து பயனர்களுக்கும், இந்த அப்டேட் செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள் கிடைக்கும். இந்த அப்டேட்டை பதிவிறக்க, பயனர்கள் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ்-க்கு செல்ல வேண்டும். பின்னர் சிஸ்டம் & அப்டேட்ஸ் விருப்பத்தின்கீழ் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட்-ஐ தேடி டவுன்லோட் / இன்ஸ்டால் செய்யவும்.

ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ப்ரோ வேரியண்ட் ஆன ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது பிளாக் மற்றும் மூன்லைட் ஒயிட் கலர்களிலும், ப்ரோ வேரியண்ட் ஆனது பிளாக் மற்றும் ஓஷன் சியான் ஷேட்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 200 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விரிவான அம்சங்கள்: ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் FHD+ OLED கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது, அதே சமயம் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்று பெரிய 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உள்ளது. மேலும் இரண்டுமே ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 8.0 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) உடன் அனுப்பப்படுகின்றன.

கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியாத் கேமராவுடன், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஆனால் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் சோனி IMX906 ப்ரைமரி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, ப்ரோ மாடலில் எச்9000 ப்ரைமரி சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளன. ஆனால் ப்ரோ வேரியண்டில் செல்பீ கேமராவுடன் கூடுதலாக 3டி டெப்த் கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆனால் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 66W வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் செய்வதற்கான ஆதரவு உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 200 5G Honor 200 Pro 5G in India gets New AI Features under Latest MR2 Update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X