Home
Mobile

சரண்டர் ஆன Honor.. ஆர்டர் அள்ளுது.. போன மாசம் அறிமுகம்.. இந்த மாசம் ரூ.10,000 விலை குறைப்பு.. என்ன மாடல்?

கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக ரூ.10,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி - அமேசான் வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024-ன் (Amazon Great Freedom Festival Sale 2024) ஒரு பகுதியாகும். அதாவது ரூ.10,000 என்கிற விலை குறைப்பு ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? அமேசானில் ரூ.10,000 என்கிற விலைகுறைப்பை பெற்றுள்ளது ஹானர் 200 5ஜி (Honor 200 5G) ஸ்மார்ட்போனாகும். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஜூலை மாதம் ஹானர் 200 ப்ரோ 5ஜி (Honor 200 Pro 5G) ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.10,000 விலை குறைப்பு.. சரண்டர் ஆன Honor.. என்ன மாடல்?

அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியாக ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, அதன் எம்ஆர்பி விலையான ரூ.39,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது . இது ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விளையாகும் . இது பிளாக் மற்றும் மூன்லைட் ஒயிட் கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 200 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7 இன்ச் ஃ புல் எச்டி பிளஸ் ஓஎல்இடி (FHD+ OLED) கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டு உள்ளது, அதே சமயம் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்றே பெரிய 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உள்ளது. ஹானர் 200 5ஜி சீரிஸின் இரண்டு மாடல்களுமே ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 8.0 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) உடன் அனுப்பப்படுகின்றன.

கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு மாடல்களுமே 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் (50MP Primary Camera), அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் (50MP Telephoto Shooter) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன.

ஆனால் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன ஹானர் 200 5ஜி மாடலில் சோனி ஐஎம்எக்ஸ் (Sony IMX906) ப்ரைமரி சென்சார் உள்ளது, மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆன ஹானர் 200 ப்ரோ 5ஜி மாடலில் எச்9000 ப்ரைமரி சென்சார் (H9000 Primary Sensor) பேக் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளன. ஆனால் ப்ரோ வேரியண்டில் செல்பீ கேமராவுடன் கூடுதலாக 3டி டெப்த் கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5200mAh பேட்டரியை கொண்டு உள்ளன. ஆனால் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் கூடுதலாக 66W வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless and Reverse Wireless Charging) செய்வதற்கான ஆதரவு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 200 5G gets Big Discount on Amazon Great Freedom Festival Sale Ends Aug 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X