பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் ஹானர் 20 ஸ்மார்ட்போன்: விலை எவ்வளவு தெரியுமா?
ஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் ஹானர் இன்று புதிய ஹானர் 20 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன
தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஜியோ சார்பில் சலுகை:
மேலும் இன்று மதியம் 12மணி அளிவில் ஹானர் 20 ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது, குறிப்பாக ஜியோ நிறுவனம் சார்பில் கேஷ்பேக் மற்றும் 125ஜிபி டேட்டா ஆஃபர் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலை
இஎம்ஐ வழியிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான விலை:
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இந்த ஹானர் 20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,999-ஆக உள்ளது, மேலும் இந்த சாதனத்திற்கு அந்நிறுவனத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இப்போது ஹானர் 20 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளே
புதிய ஹானர் 20 ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் இரண்டும் 19.5:9 விகித முழு திரையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளேயுடனும்இ ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் 20 சிறப்பம்சங்கள்:
- 6.26' இன்ச் முழு எச்.டி பிளஸ் 1080x2340 பிக்சல் கொண்ட 19.5:9 விகித பஞ்ச் ஹோல் டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 9 பை உடன் கூடிய மாஜிக் UI 2.1 இயங்குதளம்
- ஹிசிலிக்கான் கிரீன் 980 பிராசஸர்
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்
- 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 16 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் கேமரா
- 2 மெகா பிக்சல் டெப்த் கேமரா
- 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா கூடிய குவாட் கேமரா சேவை
- 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்
- 3750 எம்.ஏ.எச் பேட்டரி
நிறம்: ஐஸ்லாந்திக் வெள்ளை, மிட்நைட் பிளாக், மற்றும் சபையார் ப்ளூ


Click it and Unblock the Notifications