இந்த தேதிகளில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கும்.!
ஹானர் 20 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்முன்பு பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் ஹானர் சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி அமேசான் வலைதளத்தில் வரும் நவம்பர் 26-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஹானர் 20 ஸ்மார்ட்போன் ஆனதுரூ.2000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக இருக்கிறது, இந்த விலைகுறைப்பின் மூலம் ரூ.22,999-விலையில் கிடைக்கும்.

ஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளே புதிய ஹானர் 20 ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் இரண்டும் 19.5:9 விகித முழு திரையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளேயுடனும், ஹானர் 20 லைட்ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் 20 சிறப்பம்சங்கள்:
- 6.26' இன்ச் முழு எச்.டி பிளஸ் 1080x2340 பிக்சல் கொண்ட 19.5:9 விகித பஞ்ச் ஹோல் டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 9 பை உடன் கூடிய மாஜிக் UI 2.1 இயங்குதளம்
- ஹிசிலிக்கான் கிரீன் 980 பிராசஸர்
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்
- 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 16 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் கேமரா
- 2 மெகா பிக்சல் டெப்த் கேமரா
- 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா கூடிய குவாட் கேமரா சேவை
- 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா - வைஃபை - ப்ளூடூத் - ஜிபிஎஸ்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்
- 3750 எம்.ஏ.எச் பேட்டரி
நிறம்: ஐஸ்லாந்திக் வெள்ளை, மிட்நைட் பிளாக், மற்றும் சபையார் ப்ளூ


Click it and Unblock the Notifications