மே 21: மூன்று கேமராக்களுடன் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.21-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும்

|

ஹானர் நிறுவனம் வரும் மே 21-ம் தேதி தனது ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 21: மூன்று கேமராக்களுடன் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் ஹானர் 20 லைட் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.21-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோரி கிரிண் 710எஸ்ஒசி சிப்செட் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

ஹானர் 20 லைட் சாதனத்தின் பின்புறம் 24எம்பி + 8எம்பி + 2எம்பி என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவியில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Honor 20 Lite with triple rear camera setup announced: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X