Home
Mobile

ஹானர் 10X லைட் நவம்பர் 10ம் தேதி அறிமுகமா? என்னவெல்லாம் இந்த போனில் எதிர்பார்க்கலாம்?

ஹானர் நிறுவனம் ஹானர் 10 எக்ஸ் லைட் (Honor 10X Lite) ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் 10 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யுமென்று அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது.

Honor 10X Lite ஸ்மார்ட்போன்

Honor 10X Lite ஸ்மார்ட்போன்

ஹானர் நிறுவனம் இந்த நிகழ்வை டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வாக நடத்தும் என்று நேற்று அறிவித்துள்ளது. Honor 10X Lite ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதோடு நிறுவனம் அதன் கூட்டாண்மை பற்றியும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்ரேஞ் பட்ஜெட் விலையியல் அறிமுகமா?

மிட்ரேஞ் பட்ஜெட் விலையியல் அறிமுகமா?

ஹானர் நிறுவனம் புதிய போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை நிர்ணயம் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை, ஆனால், கடந்த காலங்களில் வெளியான கசிவுகளை வைத்துப் பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் மிட்ரேஞ் பட்ஜெட் விலையியல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் 9 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக ஹானர் 10 எக்ஸ் லைட் இருக்கும்.

Honor 10X Lite வெளியீடு விபரம்

Honor 10X Lite வெளியீடு விபரம்

Honor 10X Lite ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வை நிறுவனம் டிஜிட்டல் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் மாலை 6:30 மணிக்கு நவம்பர் 10ம் தேதி நிகழ்த்துகிறது. லைவ் ஸ்ட்ரீமிங் நிகழ்விற்கான இணைப்பு விரைவில் பகிரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹானர் 10 எக்ஸ் லைட்டின் விலை பற்றி நிம்மிடம் தகவல் எதுவும் இல்லை என்றாலும் கூட, நிறுவனத்தின் ரஷ்யா வலைத்தளம் இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச்-ஹோல் கேமராவுடன் கிறீன் மற்றும் ப்ளூ நிறத்தில் வெளிவரும் என்பதைக் காட்டியுள்ளது.

ஹானர் 10 எக்ஸ் லைட் சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படுகிறது)

ஹானர் 10 எக்ஸ் லைட் சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படுகிறது)

  • 6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட ஐபிஎஸ் அடிப்படையிலான எல்சிடி டிஸ்பிளே
  • கிரின் 710 ஏ பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட ஹானர் மேஜிக் யுஐ 3.1
  • 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு

    குவாட் ரியர் கேமரா அமைப்பு

    • 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர்
    • இணைப்பு விபரம்

      இணைப்பு விபரம்

      • புளூடூத் 5.1
      • 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை
      • எல்.டி.இ
      • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
      • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
      • 22.5W பாஸ்ட் சார்ஜிங்
      • 5,000 எம்ஏஎச் பேட்டரி
      • இந்த புதிய ஹானர் 10 எக்ஸ் லைட்ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி சுமார் தோராயமாகரூ. 15,925 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று டிப்ஸ்டர் லீக் தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Honor 10X Lite will be launched globally on November 10 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X