48 மெகாபிக்சல் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஹானர் 10 எக்ஸ் லைட்: எப்போது அறிமுகம் தெரியுமா?

|

நவம்பர் 10 ஆம் தேதி டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வின்மூலம் ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்

ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்

நவம்பர் 10 ஆம் தேதி டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வின்மூலம் ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹானர் 10 எக்ஸ் லைட் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு குறித்த சில கசிவுகள் தற்போது வரை வெளியாகவில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் ஹானர் 10 எக்ஸ் லைட் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் ஹானர் 9 எக்ஸ் லைட் வாரிசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் 10 எக்ஸ் லைட்: வெளியீட்டு தேதி

ஹானர் 10 எக்ஸ் லைட்: வெளியீட்டு தேதி

ஹானர் புதுமாடல் ஸ்மார்ட்போன் நவம்பர் 10 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு மெய்நிகர் நிகழ்வு மூலம் வெளியிடப்படும். ஹானர் 10 எக்ஸ் லைட் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் கேமரா வடிவமைப்பு இருக்கும் எனவும் இது க்ரீன் மற்றும் ஊதா என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஹானர் 10 எக்ஸ் லைட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஹானர் 10 எக்ஸ் லைட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஹானர் 10 எக்ஸ் லைட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது ஆண்ட்ராய்ட் 10 அடிப்படையாகக் கொண்ட ஹானர் 10 எக்ஸ் எக்ஸ்3.1 ஓஎஸ் இயங்குதளத்தில் ஹானர் 10 எக்ஸ் லைட் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஐபிஎஸ் அடிப்படையிலான எல்சிடி 1,680x2,400 பிக்சல்கள் தீர்மானம் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 4ஜிபி ரேம் வசதி இருக்கும் எனவும் 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரிகார்டு ஸ்லாட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இனி வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்: புதிய நடைமுறை இதுதான்!இனி வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்: புதிய நடைமுறை இதுதான்!

ஹானர் 10 எக்ஸ் லைட்: கேமரா அம்சங்கள்

ஹானர் 10 எக்ஸ் லைட்: கேமரா அம்சங்கள்

ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என கூறப்படுகிறது. கூடுதலாக மூன்று கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் வடிவமைப்பு கொண்ட 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவும் 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இருக்கும். ஸ்மார்ட்போனில் இணைப்பு விருப்பங்களுக்கு ப்ளூடூத் 5.1, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, எல்டிஇ மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 10X Lite Set to Launch on November 10 with 48 Mp Camera, 5000 mAh Battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X