Just In
- 30 min ago
அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.!
- 44 min ago
ரூ.7600 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி சி20 அறிமுகம்!
- 1 hr ago
PDF கோப்புகளை Word Document ஆக மாற்றுவது எப்படி?- இதோ எளிய வழிமுறைகள்!
- 2 hrs ago
பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Don't Miss
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Automobiles
மூன்று ஸ்பெஷல் எடிசன் டூ-வீலர்களை அறிமுகம் செய்த உலகின் பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனம்... ஏன் தெரியுமா?
- News
"ஓபனாக சொல்கிறேன்.. கேஸ் போடுங்க".. அதிரடி காட்டிய உதயநிதி.. ஹைகோர்ட் தடாலடி நோட்டீஸ்!
- Sports
அவர் எடுத்தது ரொம்ப தப்பான முடிவு.. சிஎம் பங்க்கை காய்ச்சி எடுத்த அண்டர்டேக்கர்!
- Movies
கணவருக்கு பிறந்த நாள்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த குஷ்பு.. வைரலாகும் போட்டோஸ்!
- Finance
கிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
48 எம்பி கேமராவோடு அறிமுகமான ஹானர் 10எக்ஸ் லைட்: விலை மற்றும் அம்சங்கள்!
ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.

ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்
ஹூவாய் துணை பிராண்ட் நிறுவனமான ஹானரின் புதிய ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 9 எக்ஸ் லைட்டின் வாரிசாக ஹானர் 10 எக்ஸ் லைட் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பு மற்றும் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் சவுதி அரேபிய பின் ரஷ்யா ஆகிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகளவில் அறிமுகமாகியுள்ளது.

மூன்று வண்ண விருப்பங்கள்
ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அது எமரால்டு க்ரீன், ஐஸ்லாந்திக் ஃப்ரோஸ்ட் மற்றும் மிட்நைட் கருப்பு ஆகியவையாகும். ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.20,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 10 எக்ஸ் லைட் விலை
ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.20,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனுக்கான இந்திய வெளியீடு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

6.67 இன்ச் முழுவியூ ஃபுல் எச்டி ப்ளஸ்
ஹானர் 10 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது ஆக்டோ கோர் க்ரின் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் முழுவியூ ஃபுல் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் இருக்கிறது.
"டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்" வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஸ்டேட்டஸ்: காரணம் இதுதான்?

மெமரி விரிவாக்க வசதி
ஹானர் 10 எக்ஸ் லைட் இரட்டை நானோ சிம் உடன் வருகிறது. ஹானர் 10 எக்ஸ் லைட் ஆண்ட்ராய்டு 10 மேஜிக் யுஐ3.1 மூலம் இயக்கப்படுகிறது. சேமிப்பகத்தை விரிவாக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. இதில் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இதில் கூகுள் பயன்பாட்டுக்கு பதிலாக ஹவாய் ஆப் கேலரி மற்றும் பிற அம்சங்கள் பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது.

ஹானர் 10 எக்ஸ் லைட்: கேமரா
எஃப் / 1.8 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எஃப் / 2.4 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை கேமரா அம்சங்களில் அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முன்பக்கத்தில் எஃப் / 2.0 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5,000 mAh பேட்டரி
இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்யது 22.5W வேக சார்ஜிங் அம்சம் உள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190