அசத்தலான ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் சவுதி அரேபியாவில் தனது ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக மிட்நைட் பிளாக், எமரால்டு கிரீன் மற்றும் Icelandic Frost உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 90.3 சதவீத ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டுள்ளது கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் Kirin 710 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் UI 3.1.1 கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 206 கிராம் எடை கொண்டுவெளிவந்துள்ளது ஹானர் 10எக்ஸ் லைட். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் 10எக்ஸ் லைட் சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.15,900-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications