Home
Mobile

Big Battery போன்களின் புதிய ராஜா.. 10000mAh பேட்டரி உடன் வரும் முதல் போன்!

மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் பெரிய கெப்பாசிட்டி கொண்ட பேட்டரிகள் பேக் செய்யப்படுவது இன்னும் சில மாதங்களில் சாதாரணமான விஷயமாகி விடும் என்பது போல் தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே 7000mAh பேட்டரிகளை கொண்ட ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களை நாம் காணத் தொடங்கினோம்.

இதே ஆண்டின் நடுப்பகுதியில், ஹானர் நிறுவனம் அதன் ஹானர் எக்ஸ்70 (Honor X70) ஸ்மார்ட்போனை மிகப்பெரிய 8,300mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்நிறுவனம் 10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனில் பணியாற்றுவது போல் தெரிகிறது. கடந்த சில வாரங்களாகவே, ஹானரின் 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போனை (Honor 10000mAh Battery Phone) பற்றிய தகவல்களை வெளியிட்டுவரும் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன், புதிய லீக் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

10000mAh பேட்டரி உடன் வரும் முதல் போன்!

அதன்படி ஹானர் நிறுவனத்தின் 10,000mAh பேட்டரி ஸ்மார்ட்போன் ஆனது என்பிஐ (NPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது; அதாவது நியூ ப்ராடெக்ட் இன்ட்ரோடெக்ஷன் (New Product Introduction) நிலைக்கு வந்துவிட்டது. ஆக இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பகால முன்மாதிரியை (Early prototying) கடந்திருக்கலாம்

ஹானர் நிறுவனம் குறிப்பிட்ட மாடலை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், சீன சமுக ஊடகத்தளமான வெய்போவில் கருத்து தெரிவிப்பவர்கள் இது ஹானர் பவர் 2 (Honor Power 2) ஸ்மார்ட்போன்ஆக இருக்கலாம் என்று யூகித்து உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், ஹானர் நிறுவனம் 8,000mAh பேட்டரியுடன் கூடிய ஹானர் பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்ததால், அடுத்த மாடல் - இன்னும் பெரிய பேட்டரியுடன் ஹானர் பவர் 2 ஆக வருமென்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

ஹானரின் 8,000mAh செல் ஆனது 10% க்கும் அதிகமான சிலிக்கான் கன்டென்ட் மற்றும் 821Wh/L ஆற்றல் அடர்த்தி கொண்ட உயர்-சிலிக்கான் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த எண்கள்தான் ஹானர் அதன் அளவை நியாயமானதாக வைத்திருக்க அனுமதிக்கும் அதே நேரத்தில் திறனை அதிகரிக்கவும் அனுமதித்தன.

இதே மாதிரியான செயல்முறை 10000mAh ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தப்படலாம். பெரிய அளவிலான பேட்டரி கெப்பாசிட்டி கொண்டிருந்தாலும் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது 8.5 மிமீ தடிமனுக்கும் குறைவான.. மிகச்சிறிய பேட்டரிகளை கொண்ட தற்போதைய மாடல்களை விட மெல்லியதாக இருக்கும் என்று டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் கூறுகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஹானர் 2 ஸ்மார்ட்போன் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இப்போது என்பிஐ நிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுவதால், இது எப்படியும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஹானர் நிறுவனம் மட்டுமே பெரிய அளவிலான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் பணியாற்றவில்லை, ஒப்போ நிறுவனம் அதன் லேட்டஸ்ட் மாடல் ஆன ஒப்போ கே13 டர்போ (OPPO K13 Turbo) மற்றும் ஒப்போ கே13 டர்போ ப்ரோ (OPPO K13 Turbo Pro) ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியதும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 7,000mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

இதேபோல் ரியல்மி (Realme) நிறுவனத்தின் ரியல்மி 15 ப்ரோ (Realme 15 Pro) ஸ்மார்ட்போன் மேற்கண்ட அதே பேட்டரி மற்றும் சார்ஜிங் திறனை கொண்டுள்ளது. இதேபோல வரவிருக்கும் சில ரெட்மி மற்றும் ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் ஆனது 7,000mAh மற்றும் 8,000mAh பேட்டரிகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. 2025 செப்டம்பரில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஷாவ்மீ 16 சீரிஸில் (Xiaomi 16 Series) கூட 7,000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 10000mAh battery phone enters NPI stage Could be Honor Power 2 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X