Home
Mobile

ஆளுக்கொன்னு வாங்குவீங்க.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது அட்டகாசமான ஹானர் போன்கள்..

ஹானர் நிறுவனம் நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஹானர் நிறுவனம் இரண்டு அசத்தலான ஸ்மார்ட்போன்களை வரும் நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது ஹானர் நிறுவனம் ஹானர் 100 சீரிஸ் (Honor 100 series) ஸ்மார்ட்போன்களை வரும் நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

50MP கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது அட்டகாசமான ஹானர் போன்கள்..

இப்போது ஆன்லைனில் வெளியான ஹானர் 100 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஹானர் 100 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும்.

குறிப்பாக மீடியாடெக் சிப்செட் வசதியை விட இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் சக்திவாய்ந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இருப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

50MP கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது அட்டகாசமான ஹானர் போன்கள்..

ஆனால் இந்த போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் 100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரண்டு இரண்டு ஹானர் போன்களிலும் 50எம்பி மெயின் கேமரா ( 50MP main camera sensor) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் டெப்த் லென்ஸ் ஆகிய கேமராக்களுடன் இந்த போன்கள் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி டூயல் கேமராவைக் கொண்டுள்ளன ஹானர் 100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்.

இந்த ஹானர் 100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளன இந்த போன்களின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன்களின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.

50MP கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது அட்டகாசமான ஹானர் போன்கள்..

100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W charging) வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஹானர் 100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும். எனவே இந்த போன்களை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன்கள் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போன்களின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன புதிய ஹானர் போன்கள். மேலும் ஹானர் 100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 100 series key specifications leaked online: check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X