மீண்டும் அதிரடி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 1.5K டிஸ்பிளே.. புதிய போனை களமிறக்கும் ஹானர்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஹானர் 90 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். அதாவது ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் 100 ப்ரோ (HONOR 100 Pro) எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஹானர் போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இப்போது அறிமுகமான ஹானர் 90 போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனின் கசிந்த ஹானர் 100 ப்ரோ போனின் சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அதாவது ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் 1.5கே ரெசொலூஷன் டிஸ்பிளே உள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஹானர் 90 போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஹானர் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) வருகிறது.
இந்த ஹானர் போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த 8 ஜிபி மாடலில் 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதோபோல 12 ஜிபி ரேம் மாடலில் 7 ஜிபி மெமரி வருகிறது. 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.
இந்த போனில் 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. மேலும் இதில் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது.

ஹானர் 90 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் 2.5GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக அட்டகாசமான அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹானர் மாடல்களில் வரும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) வருகிறது.
மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்களில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 90 போனை ரூ.37,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.39,999 விலையிலும் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








