முழுசா வேற மாதிரி.. 100W சார்ஜிங்.. Snapdragon 7 Gen 3.. மிரட்டலான ஹானர் போன் ரெடி.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் (Honor) சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் ஹானர் 90 போனுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஹானர் 100 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம்.
அதாவது வரும் நவம்பர் 23-ம் தேதி ஹானர் 100 (HONOR 100) சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் உலக சந்தைகளில் இந்த ஹானர் 100 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹானர் 100 ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் பல அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

அதன்படி ஹானர் 100 ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3)சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் 100 ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
ஹானர் 100 போனில் 50எம்பி மெயின் கேமரா (50MP main camera sensor) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் டெப்த் லென்ஸ் ஆகிய கேமராக்களுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி டூயல் கேமராவைக் கொண்டுள்ளன ஹானர் 100 ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் 100 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஹானர் 100 ஸ்மார்ட்போன் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன்களின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹானர் 100 ஸ்மார்ட்போன் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W charging) வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போன்களை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன்கள் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் போன். ஆனால் இந்த ஹானர் 100 போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








