மிரளுது மார்க்கெட்.. ரூ.29,360 போதும்.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1டிபி மெமரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் புதிய ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் தற்போது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஹானர் 100 அம்சங்கள்: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2664×1200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர்ஸ் ஆதரவு, 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குவால்காம் ஹானர் 100 (HONOR 100) ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் 100 ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் என்எப்சி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஹானர் 100 போனில் உள்ளன.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 எஸ்எலஆர் பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 100 போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
ஹானர் 100 ப்ரோ அம்சங்கள்: 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2700×1224 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர்ஸ் ஆதரவு, 3840Hz high-frequency PWM dimming, 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குவால்காம் ஹானர் 100 ப்ரோ (HONOR 100 Pro) ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2) வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதில் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 66 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் என்எப்சி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஹானர் 100 ப்ரோ போனில் உள்ளன.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 எஸ்எலஆர் பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற டரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 100 ப்ரோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White), பிரைட் பிளாக் (right Black), மோனெட் பர்பிள் (Monet Purple ) மற்றும் பட்டர்ஃபிளை ப்ளூ (Butterfly Blue) நிறங்களில் இந்த ஹானர் 100 சீரிஸ் போன்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக ஹானர் 100 போனின் ஆரம்ப விலை 2499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.29,360). அதேபோல் ஹானர் 100 ப்ரோ போனின் ஆரம்ப விலை 2499 யுவான் (இந்திய மதிப்பில் (ரூ.39,935).
டிசம்பர் 1-ம் தேதி சீனாவில் இந்த புதிய ஹானர் 100 சீரிஸ் போன்கள் விற்பனைக்கு வருகின்றன. கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications