நவம்பர் 21: ஏஐ கேமராக்களுடன் ஹானர் 10 லைட் அறிமுகம்.!
ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் நவம்பர் 21-ம் தேதி ஹானர் 10 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்திய
சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை அடிப்படையக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.84-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2280 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ்ஏ73 செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்தவதற்கு மிக அருமையாக இருக்கும்.

கேமரா
ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி- விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3320எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். பின்பு ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் இந்திய விலைப் பொறுத்தவரை ரூ.10,400-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications