புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.!
ஹானர் நிறுவனம் தனது ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு EMUI 9.1 அப்டேட் வழங்கியுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.21-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கிரன் 710 12என்.எம் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை EMUI 9.0 இயங்குதள ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 24எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஹானர் 10 லைட் பொறுத்தவரை 3400எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








