ஏப்ரல் 19: புதிய ஹானர் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஹானர் 10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 10 ஸ்மார்ட்போன் ஆனது பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 970 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹானர் 10 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஆண்டு ஹூவாய் நிறுவனம் அதிகளவு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை செயற்கை நுண்ணரிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக ஏப்ரல் 19-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, வரும் மே மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.


Click it and Unblock the Notifications