HMD முரட்டு போன்.. 64எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. IP68 ரேட்டிங்.. எல்சிடி டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?
நோக்கியா போன்களை அறிமுகம் செய்த வந்த எச்எம்டி நிறுவனம் தற்போது எச்எம்டி எனும் பெயரில் ஸ்மாரட்போன்கள் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. அதாவது இந்நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது எச்எம்டி எக்ஸ்ஆர்21 ரக்டு போன் (HMD XR21 rugged phone) மற்றும் எச்எம்டி டி21 டேப்லெட் (HMD T21 tablet ) மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது எச்டிஎம் குளோபல நிறுவனம். இப்போது இந்த இரண்டு சாதனங்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

எச்எம்டி எக்ஸ்ஆர்21 ரக்டு போன் அம்சங்கள் (HMD XR21 specifications): 6.49-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த எச்எம்டி எக்ஸ்ஆர்21 ரக்டு போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக மிட்நைட் பிளாக் நிறத்தில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக MIL-STD-810H 86 என் சான்றிதழ் பெற்றுள்ளது இந்த எச்எம்டி எக்ஸ்ஆர்21 ரக்டு போன். மேலும் இந்த போன் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது. பின்பு ஸ்னாப்டிராகன் 695 5ஜி (Snapdragon 695 5G SoC) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அசததலான ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுகக்கும், செல்பிகளுக்கும், வீடீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை கொண்டுள்ளது.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு வழங்கப்படும். குறிப்பாக 4800எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் எச்எம்டி எக்ஸ்ஆர்21 ரக்டு போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.
எச்எம்டி டி21 டேப்லெட் அம்சங்கள் (HMD T21 tablet specifications): 10.36-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் எச்எம்டி டி21 டேப்லெட் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஐீ52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த சாதனம்.
அதேபோல் யுனிசாக் டி613 ஆக்டோ-கோர் (UNISOC T612 Octa-Core) பிராசஸர் உடன் இந்த எச்எம்டி டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு இதில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

8எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 8200 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது எச்எம்டி டி21 டேப்லெட். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த சாதனத்திற்குக் கிடைக்கும். பிளாக் ஸ்டீல் நிறத்தில் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் மட்டுமே எச்எம்டி எக்ஸ்ஆர்21 ரக்டு போன் மற்றும் எச்எம்டி டி21 டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனங்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். பின்பு எச்எம்டி எக்ஸ்ஆர்21 ரக்டு போனின் விலை ரூ.54,215-ஆக உள்ளது. பின்பு எச்எம்டி டி21 டேப்லெட் மாடலின் விலை ரூ.27,105-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








