NOKIA நீ சிங்கம் தான்.. குழந்தைகளுக்கான குட்டி ஸ்மார்ட்போன்.. 3.2-இன்ச் டச் ஸ்க்ரீன், 2000mAh பேட்டரி!
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது - குழந்தைகளுக்கான "குட்டியான" ஒரு டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அது எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் (HMD XploraOne) ஸ்மார்ட்போன் ஆகும். பின்லாந்தை தளமாக கொண்ட எச்சஎம்டி க்ளோபல் நிறுவனம் வியரிப்பிள்ஸ் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்ப்ளோரா (Xplora) உடன் இணைந்து இந்த புதிய டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் - காலிங் மற்றும் மெசேஜிங் போன்ற - அடிப்படை அம்சங்களை வழங்குகிறது.

எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போனை "வெளிப்படுத்தி" இருந்தாலும் கூட எச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் நம்பகமான டிப்ஸ்டர் ஒருவரின் வழியாக "கிட்டத்தட்ட" எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும், கலர் ஆப்ஷன்களும் லீக் ஆகியுள்ளன.
எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? எக்ஸ் (X) வழியாக டிப்ஸ்டர் @smashx_60 பகிர்ந்துள்ள விவரங்களின்படி - எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போன் ஆனது 2.5டி பினிஷ் உடனான 3.2-இன்ச் க்ய விஜிஏ ஐபிஎஸ் டிஸ்பிளே இடம்பெறலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, சுவாரசியமாக எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போனில் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் ஆகிய 2 பக்கங்களிலுமே கேமரா இருக்கும். இது 2 மெகாபிக்சல் ரியர் கேமராவையும் மற்றும் 0.3 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் டி127 (Unisoc T127) சிப்செட்டில் இயங்கும் என்றும், இது 64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 32ஜிபி வரை மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பேட்டரியை பொறுத்தவரை எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போன் ஆனது யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் ஆதரவு (USB TypeC Port) உடனான 2000mAh பேட்டரியை பேக் செய்யலாம். மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கையும் (IP52 Rating) கொண்டிருக்கலாம்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூடூத், ஜிபிஎஸ், வைஃபை, எப்எம் ரேடியோ மற்றும் ஜெமினி ஏஐ போன்ற பல்வேறு விருப்பங்களை வழங்குவதாக கூறப்படுகிறது. கடைசியாக எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போன் ஆனது சார்கோல் (Charcoal) மற்றும் சியான் ப்ளூ (Cyan Blue) ஆகிய 2 கலர்களில் வெளியாகும் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார்.
உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள்: எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஆனது குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு பேஸிக் ஸ்மார்ட்போன் ஆகும் இது காலிங் மற்றும் மெசேஜிங் செயல்பாடுகளை வழங்கும் மற்றும் முன் மற்றும் பின்புற கேமராக்களை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் நேவிகேஷன் பட்டன்களும் உள்ளன.
மேலும் இது காலண்டர், கால்குலேட்டர் மற்றும் கேலரி போன்ற அத்தியாவசிய ஆப்களை மட்டுமே கொண்டிருக்கும். அதாவது இந்த ஸ்மார்ட்போன் சோஷியல் மீடியா அல்லது இண்டர்நெட்டிற்கான அணுகலை வழங்காது. எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போனில் தேவைக்கேற்ப பெற்றோர்களின் காண்டாக்ட்களையும் சேர்க்கலாம், அகற்றலாம் அல்லது தேவை இல்லாத நம்பர்களை தடுக்கலாம். இது முழு கட்டுப்பாட்டையும் உறுதி செய்கிறது கூடவே இருப்பிட கண்காணிப்பையும் (location tracking) வழங்குகிறது.
என்ன விலை? எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது எக்ஸ்ப்ளோராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை அனைத்து கோணங்களிலிருந்தும் காட்டுகிறது. ஆனால் விலை விவரங்களை குறிப்பிடவில்லை. ஆனால் பயனர்கள் இன்றே பதிவு செய்து எச்எம்டி எக்ஸ்ப்ளோரா ஒன் போனுக்கான பிரத்யேக முன் விற்பனை சலுகைகளை பெறுமாறு அது கேட்டுக்கொள்கிறது.


Click it and Unblock the Notifications








