பிளடி ஸ்வீட்.. சீன போன்களை ஓடவிடும் HMD.. பட்ஜெட் விலை.. 108MP கேமரா.. பழைய Nokia சாயலலில் புது Mobile..
எச்எம்டி (HMD) நிறுவனம் இந்த ஆண்டு முரட்டுத்தனமாக வேலை செய்வது போல் தெரிகிறது. இதுவரை யாரும் எதிர்பார்க்காத விதத்தில் எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் வரிசையாக, ஒன்றின் பின் ஒன்றாக தொடர்ந்து பல ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனம் மற்றும் பியூச்சர் போன் (Feature Phone) சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. நோக்கியா (Nokia) நிறுவனத்தின் உரிமையை பெற்ற இந்த நிறுவனம், புதிய பொலிவுடன் நோக்கியா சாதனங்களை (Nokia devices) HMD பிராண்டின் கீழ் அறிமுகம் செய்து வருகிறது.
எச்எம்டி பிராண்டட் ஸ்மார்ட்போன்ஸ் (HMD branded smartphones) பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் (Leak) செய்யப்பட்டுள்ளது. இதுவரை நமக்கு தெரிந்த தகவலை வைத்து பார்க்கையில், எச்எம்டி குளோபல் நிறுவனம் 3 எச்எம்டி பட்ஜெட் ஸ்மார்ட்போன் (HMD budget smartphone) சாதனங்களில் தீயாய் வேலை பார்த்து வருகிறதென்பதை நாம் அறிவோம். இந்த மூன்று சாதனங்களின் பெயரையும் நாம் அறிவோம்.

சீன போன்களை ஓடவிடும் HMD.. பழைய Nokia சாயலலில் புது மொபைல்கள்:
எச்எம்டி அட்லாஸ் (HMD Atlas), எச்எம்டி நைட்ஹாக் (HMD Nighthawk), மற்றும் எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline), ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை மிகவும் தரமான அம்சங்களுடன் எச்எம்டி நிறுவனம் பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் சிறந்த போன்களாக (Best budget segment phones) விளங்கும் விதத்தில் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் செக்மென்ட் பிரிவு சீன போன்களின் ஆதிக்கம் நிறைந்த இதமாக பார்க்கப்படுகிறது.
இந்த செக்மென்ட்டில் எச்எம்டி நிறுவனம் அதன் புதிய போன்களை நோக்கியாவின் பழைய போன் சாயல் உடன், புது பொலிவில் வழங்கி, நோக்கியா ரசிகர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பிரியர்களை தன்வசம் இழுக்க முயற்சிக்கிறது. மேற்கூறிய மூன்று போன்களும் சில ஒரே மாதிரியான அம்சங்களை பெரும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதில் உள்ள முக்கிய அம்சங்களில் வேறுபாடுகளை நாம் பார்க்கலாம்.
முக்கியமான அம்சங்கள் என்று கூறும் பொழுது, கேமரா (Camera), சிப்செட் (Chipset), பேட்டரி (Battery) அளவு மற்றும் விலை போன்ற முக்கியமான அம்சங்களில் இந்த மூன்று மாடல்களுக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு மத்தியில் எச்எம்டி நிறுவனம் இன்னும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
பிளடி ஸ்வீட் நிறம்.. 108MP கேமரா.. மாஸ் காட்டும் HMD Xenon:
இவை எச்எம்டி ரிட்ஜ் (HMD Ridge) மற்றும் எச்என்டி ஸேனான் (HMD Xenon) என்ற இரண்டு போன்களை எச்எம்டி உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இது 6.64" இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே (display), 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate), ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் (snapdragon 480+ SoC), 50MP கேமரா (camera), 8MP செல்பி கேமரா அம்சங்களை பேக் செய்துள்ளது. இது 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வரை பெரும்.
மறுபுறம், எச்எம்டி ஸேனான் (HMD Xenon) சாதனம் பழைய கிளாசிக் நோக்கியா லூமியா போனின் (Classic Nokia Lumia) தோற்றத்தை நெருங்கிய வடிவமைப்பை பெரும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. நோக்கியா ஸேனான் சாதனம் ஸ்னாப்டிராகன் 695 (Snapdragon 695) அல்லது ஸ்னாப்டிராகன் 6s ஜென் 3 சிப்செட் (snapdragon 6s Gen 3 chipset) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இது 108MP கேமராவை OIS ஆதரவுடன் கொண்டுவரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதன் ஸ்டோரேஜ் 4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் (RAM) விருப்பத்துடன், 128ஜிபி அல்லது 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் பட்ஜெட் செக்மென்ட் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 15,000 முதல் ரூ.20,000 விலைக்குள் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications