Home
Mobile

மார்க்கெட்டில் மாஸ் காட்டும் HMD.. 50எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. வருகிறது மிரட்டலான போன்.. எந்த மாடல்?

நோக்கியா (Nokia) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வந்த எச்எம்டி குளோபல் நிறுவனம் எச்எம்டி பெயரில் அறிமுகம் செய்யத் தொடங்கி விட்டது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் எச்எம்டி வியூ (HMD View) எனும் புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் அறிமுகம் குறித்த தகவல்கள் மற்றும் இதன் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

எச்எம்டி வியூ அம்சங்கள்: ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே ( FHD+ OLED display) வசதியுடன் இந்த எச்எம்டி வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

மார்க்கெட்டில் மாஸ் காட்டும் HMD..  வருகிறது மிரட்டலான போன்..

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் வசதியுடன் இந்த புதிய எச்எம்டி வியூ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு எச்எம்டி வியூ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது எச்எம்டி வியூ ஸ்மார்ட்போன்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி வியூ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த எச்எம்டி வியூ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

மார்க்கெட்டில் மாஸ் காட்டும் HMD..  வருகிறது மிரட்டலான போன்..

4700எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி வியூ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்டியர் பிளாக் (Meteor Black), ஐஸ் (கிரே), வெல்வெட் (Velvet) நிறங்களில் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த புதிய எச்எம்டி வியூ ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 19-ம் தேதி அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக ரூ.15,000 பட்ஜெட்டில் இந்த புதிய எச்எம்டி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD View Launch Date Revealed: check specifications, price, Colour Options
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X