1 மணி நேரத்தில் மொத்தமா காலி.. ரூ.9,499 க்கு இறங்கிய வேகத்தில் குவிந்த ஆர்டர்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரூ.10,000-க்கு கீழுள்ள பட்ஜெட் விலையில் சர்வம் ஏஐ நிறுவனத்தின் இண்டஸ் ஏஐ அசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக வெளியாகி, இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹெச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) ஸ்மார்ட்போன் விற்பனையில் பட்டையை கிளப்பி இருக்கிறது.
நேற்று (மே 26) முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை தொடங்கிய ஒரே மணி நேரத்திற்குள் அனைத்து போன்களும் விற்று தீர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. ரூ.9,499 என்ற அறிமுக விலையில் கிடைத்ததால் பட்ஜெட் பிரியர்களிடையே இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இண்டஸ் ஏஐ அசிஸ்டன்ட் இதில் கிடைக்கிறது. மத்திய அரசின் இந்த டிஜிட்டல் பாதுகாப்பு பீச்சர்களுடன் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) ஆப் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிடைத்ததால், எளிதாக கஸ்டமர்களிடையே கொண்டு சேர்க்க முடிந்திருக்கிறது.
அடுத்த விற்பனை எப்போது: ஸ்மார்ட்போன் விரும்பிகள் அளித்துள்ள இந்த அமோக வரவேற்பிற்கு ஹெச்எம்டி நிறுவனம் நன்றியை தெரிவித்ததோடு முதல் கட்ட விற்பனையில் போனை வாங்க தவறியவர்களுக்காக, அடுத்த ஸ்டாக் எப்போது வரும், அடுத்த விற்பனை எந்த தேதியில் தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறது.
ஹெச்எம்டி வைப் 2 5ஜி அம்சங்கள் (HMD Vibe 2 5G Specification): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி8200 6என்எம் (Octa Core Unisoc T8200 6nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது.
6.74 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் (Waterdrop Notch) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) உள்ளது.
8 எம்பி செல்பீ கேமராவை இந்த ஹெச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பேட்டரி கேபாசிட்டி வரவேற்க வேண்டியதாக இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.6 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுத்துள்ளது.
இந்த விலைக்கு ஏற்ப IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) பேக் செய்யப்பட்டு உள்ளது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) உள்ளது.
பட்ஜெட்டில் கிடைக்கும் 5ஜி மாடலாக இருந்தும், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கிடைக்கிறது. ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB Type-C) சப்போர்ட் உள்ளது. காஸ்மிக் லாவெண்டர், நார்டிக் ப்ளூ மற்றும் பீச் பிங்க் கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications