NOKIA.. பட்ஜெட்ல எப்போவும் நான் தான் ராஜா.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி உடன் புதிய ஸ்மார்ட்போன்!
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டில்லை எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. என்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்? என்ன விலை?
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது - எச்எம்டி வைப் 2 (HMD Vibe 2) ஸ்மார்ட்போன்னை பற்றித்தான். எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் எச்எம்டி மீம்ஸ் (HMD_MEME'S) ஆல் பகிரப்பட்டுள்ள விவரங்கள் ஆனது இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்கிற யோசனையை நமக்கு வழங்குகிறது.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரலாம்?
- எச்டி பிளஸ் ரெசல்யூஷன்
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.75-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- யுனிசாக் டி7200 4ஜி சிப்செட்
- 4ஜிபி ரேம்
- 128ஜிபி மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50எம்பி ப்ரைமரி கேமரா
- டூயல் கேமரா வடிவமைப்பிற்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை 0.8MP சென்சார்
- 2எம்பி அல்லது 5எம்பி செல்பீ கேமரா
- ஒரு முழு நாள் வசதியாக நீடிக்கும் 5000mAh பேட்டரி
- 10W வயர்டு சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- விலை பெரும்பாலும் ரூ.10,000 க்குள் தான் இருக்கும்
கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான எச்எம்டி வைப் 5ஜி (HMD Vibe 5G ) ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்: இந்தியாவில் எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் மற்றும் பர்பிள் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999 க்கு அறிமுகமானது. சுவாரசியமாக இது இன்னமும் அதே விலைக்கே (அமேசான், பிளிப்கார்ட்) வழியாக வாங்க கிடைக்கிறது; அதாவது எந்த விலைகுறைப்பையும் பெறவில்லை.
எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனானது 720 × 1604 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 20:9 விஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் 6என்எம் யுனிசாக் டி760 சிப்செட கொண்டு இயங்குகிறது. இது குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ76 மற்றும் ஆக்டா கோர் கோர்டெக்ஸ் ஏ55 ஆகியவைகளை உள்ளடக்கிய மாலி-ஜி57 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை மெமரியை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது. இதற்கு LED ஃபிளாஷ் ஆதரவும் உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவை பேக் செய்கிறது.
பேட்டரியை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது டூயல் சிம் ஆதரவை கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (9 பேண்ட்ள்), டூயல் 4ஜி வோல்ட் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








