அதிருது இந்திய மார்க்கெட்.. 5000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய HMD போன்.. எந்த மாடல்?
எச்எம்டி வைப் 2 (HMD Vibe 2) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த போனின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் பிளிப்கார்ட் மைக்ரோசைட் தளத்தில் இந்த போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் எச்எம்டி வைப் 2 போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
எச்எம்டி வைப் 2 அம்சங்கள் ( HMD Vibe 2 specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளெ வசதியுடன் இந்த புதிய எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அக்டோ கோர் யுனிசார் டி7200 எஸ்ஒசி (Unisoc T7200 SoC) சிப்செட் உடன் எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
4ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியுடன் எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 512ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
5000mAh பேட்டரி உடன் எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஐபி52 ரேட்டிங் உடன் இந்த புதிய எச்எம்டி போன் வெளியாகும்.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications