மார்க்கெட்டே மிரள போகுது.. OLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. வருகிறது புது HMD போன்.. எந்த மாடல்?
எச்எம்டி (HMD) குளோபல் நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் எச்எம்டி வைப் 2 (HMD Vibe 2) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது எச்எம்டி நிறுவனம்.
அதாவது எச்எம்டி வைப் 2 கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது எச்எம்டி நிறுவனம். குறிப்பாக இந்த போனும் மலிவு விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புதிய போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில கசிந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

எச்எம்டி வைப் 2 அம்சங்கள் ( HMD Vibe 2 specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளெ வசதியுடன் இந்த புதிய எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2)சிப்செட் உடன் எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 512ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
5000mAh பேட்டரி உடன் எச்எம்டி வைப் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போன் விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த எச்எம்டி போன்.


Click it and Unblock the Notifications








