HMD வேற லெவல்.. ரூ.14,999 பட்ஜெட்ல 64எம்பி சோனி கேமரா.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி (HMD Vibe 2 Pro 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 64எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த எச்எம்டி போனில் உள்ளன. இப்போது எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (HMD Vibe 2 Pro 5G Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 20 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
64எம்பி பிரைமரி Sony IMX682 சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் தெளிவான படங்களை எடுக்க முடியம். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த புதிய எச்எம்டி போனில் உள்ளன.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. சில்வர் மிஸ்ட், அக்வா கிரீன் மற்றும் காஸ்மிக் பர்பிள் ஆகிய கலர்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.
எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி விலை: 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,999-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 8 ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி போனை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications
