Home
Mobile

அடுத்த வாரம் களமிறங்கும் புது HMD 5ஜி போன்.. சோனி கேமரா.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

எச்எம்டி நிறுவனம் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி (HMD Vibe 2 Pro 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 29-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த எச்எம்டி போனின் முக்கிய விவிரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன.

எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (HMD Vibe 2 Pro 5G Specifications): 6.78-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடுத்த வாரம் களமிறங்கும் புது HMD 5ஜி போன்.. எந்த மாடல்?

64எம்பி சோனி ஐஎம்எக்ஸ்682 பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட்(MediaTek Dimensity 6400 chipset) உடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி வெளிவரும். இந்த போனில் அனைத்து ஆப்பகளையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய எச்எம்டி போனில் உள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி மாடல் வெளியாகும். மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. சில்வர் மிஸ்ட், அக்வா கிரீன் மற்றும் காஸ்மிக் பர்பிள் ஆகிய கலர்களில் இந்த புதிய எச்எம்டி போன் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அனைத்து சிறப்பான அம்சங்களுடன் எச்எம்டி வைப் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Vibe 2 Pro 5G India Launch Date Announced: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X