Home
Mobile

பின்றானே இவன்.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. FHD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கிவரும் எச்எம்டி நிறுவனத்தின் புதிய மாடலாக எச்எம்டி வைப் 2 மேக்ஸ் (HMD Vibe 2 Max) வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், டிஸ்பிளே, கேமரா, சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

கடந்த மாதம் எச்எம்டி வைப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியது. பட்ஜெட்டில் பக்காவான பீச்சர்களை கொடுத்ததால், நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், எச்எம்டி வைப் 2 மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்போது, முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. ரேம், மெமரி விவரங்களும் தெரியவந்துள்ளன.

பின்றானே இவன்.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்!

எச்எம்டி வைப் 2 மேக்ஸ் அம்சங்கள் (HMD Vibe 2 Max Specifications): 6.78 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளே பீச்சர்கள் முன்னதாக வெளியான எச்எம்டி வைப் 2 ப்ரோ மாடலை போலவே இருக்கின்றன.

ஆக்டா கோர் யுனிசோக் டி9100 (Octa Core Unisoc T9100) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கொண்ட மாடலாக இந்த எச்எம்டி வைப் 2 மேக்ஸ் வெளியாக இருக்கிறது.

33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியுடன் வெளியாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது.

மேலும், டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. இந்த எச்எம்டி வைப் 2 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் பிளாக் (Black), ரெட் (Red) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்கள் வெளியாக இருக்கின்றன. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன.

மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், முன்னதாக வெளியான எச்எம்டி வைப் 2 ப்ரோ மாடலின் பீச்சர்கள் மற்றும் விலையை தெரிந்து கொண்டால், இந்த மாடலின் விலையை யூகிக்கலாம். ஆகவே, அதை பார்ப்போம். எச்எம்டி வைப் 2 ப்ரோவில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உள்ளது.

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்682 சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கிறது. 6.78 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, விலையிலும் பெரிய மாற்றம் இருக்காது.

இந்திய மார்கெட்டில் எச்எம்டி வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 16,999ஆக இருந்தது. ஆகவே, இந்த எச்எம்டி வைப் 2 மேக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இதில் 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. வெளியீட்டு தேதி விரைவில் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
HMD Vibe 2 Max With 108MP Camera 6000mAh Battery Key Specifications Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X