Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.1500 டிஸ்கவுண்ட் உடன் நாளை முதல் SALE.. 6000mAh பேட்டரி கொண்ட HMD-யின் புது 5ஜி போன்!

நோக்கியா (NOKIA) பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது கடந்த வாரம், இந்திய சந்தையில் அதன் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக எச்எம்டி வைப் 2 (HMD Vibe 2) மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இது நாளை முதல் (மே.26) விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் டே சேல் ஆபர் (First Day Sale Offer) குறித்த விவரங்கள் இதோ:

எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை சலுகை: இந்தியாவில், எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.10,999 என்றும், ஹை-எண்ட் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் SALE.. 6000mAh பேட்டரி கொண்ட HMD-யின் புது 5ஜி போன்!

எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக மே 26 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். விற்பனையின் முதல் நாளில் மட்டும் (அதாவது மே 26 ஆம் தேதி மட்டும்), தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் அல்லது யுபிஐ பரிவர்த்தனை மூலம்ரூ.1,500 சிறப்பு உடனடி தள்ளுபடி கிடைக்கும.

இதன்கீழ் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷனின் விலையை ரூ.9499 க்கும் மற்றும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் விலையை ரூ.10,499 க்கும் கொண்டு வர முடியும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை காஸ்மிக் லாவெண்டர், நார்டிக் ப்ளூ மற்றும் பீச் பிங்க் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.

எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உடன் வரும் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ல் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 265ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் எச்டி பிளஸ் (720×1,600 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது 2.3GHz வரை கிளாக் செய்யப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் பிராசஸரில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டாண்டர்டாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ (AI) ஆதரவு கொண்ட ரியர் கேமரா யூனிட் உள்ளது.

அதில் எல்இடி (LED) ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, இந்த ஸ்மார்ட்போனில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. எச்எம்டி-யின் இந்த புதிய ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனில், ப்ளூடூத் 5.0, வைஃபை 5 மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் உள்ளன. மேலும், இதில் ஆக்சிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. கூடவே பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது (இதற்கான சார்ஜர் பாக்ஸில் சேர்க்கப்பட்டு உ ள்ளது). கடைசியாக, அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 168×77.7×8.6 மிமீ உள்ளது மற்றும் எடையில் 210 கிராம் உள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Vibe 2 How To Buy This 5G Smartphone For Rs 9499 Instead of Rs 10999 in Flipkart on May 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X