Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும். ரூ.15,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்ற எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) ஸ்மார்ட்போனில் புதிய வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் தனியிடம் பிடித்துள்ள இந்த எச்எம்டி வைப் 2 5ஜி மாடலின் விவரங்களை பார்க்கலாம்.

கடந்த மே மாதத்தில் இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் மட்டுமே களமிறங்கின. மே 26ஆம் தேதி விற்பனை தொடங்கியது. 1 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. இதனால், அடுத்து சேல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆர்டர் பிச்சிக்கும். ரூ.15,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆகவே, இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனுக்கு இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு புதிய வேரியண்ட்டை எச்எம்டி நிறுவனமானது, களமிறக்கி இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.16,999 ஆக நிர்யணம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் விற்பனை ஜூன் 16ஆம் தேதி தொடங்குகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்ய கிடைக்க இருக்கிறது. அறிமுக சலுகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.14,999 விலைக்கு இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். கூடுதல் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும்.

எச்எம்டி வைப் 2 5ஜி அம்சங்கள் (HMD Vibe 2 5G Specification): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு அப்டேட்களை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆக்டா கோர் யுனிசோக் டி8200 6என்எம் (Octa Core Unisoc T8200 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது.

வாட்டர் டிராப் நாட்ச் (Waterdrop Notch) டிசைனில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. மேலும், 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ற பர்ஃபாமென்ஸ் இருக்கிறது.

8.6 எம்எம் தடிமனுடன் 6000mAh பேட்டரியை இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மொத்தமாக 210 கிராம் எடை கொண்டுள்ளது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) வருகிறது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது. காஸ்மிக் லாவெண்டர், நார்டிக் ப்ளூ மற்றும் பீச் பிங்க் 3 கலர்களில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
HMD Vibe 2 5G With 6GB RAM 128GB Storage Launched Sale From June 16 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X