பட்டையை உறிக்குது விற்பனை.. ரூ.3,700 ஆஃபரில் 6000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலைக்கு ஸ்மார்ட்போனை களமிறக்குவதில் எச்எம்டி (HMD) நிறுவனமானது, சீன நிறுவனங்களுக்கு போட்டி கொடுத்து வருகிறது. இதில் 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா பீச்சர்களுடன் எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G) ஸ்மார்ட்போன் களமிறங்கியது. இப்போது, தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,700 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,299 விலைக்கு இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மேலும், நோ-காஸ்ட் ஈஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கின்றன.

எச்எம்டி வைப் 2 5ஜி அம்சங்கள் (HMD Vibe 2 5G Specification): 6.74 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. வாட்டர் டிராப் நாட்ச் (Waterdrop Notch) கொண்ட இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் கிடைக்கும்.
ஆக்டா கோர் யுனிசோக் டி8200 6என்எம் (Octa Core Unisoc T8200 6nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த எச்எம்டி வைப் 2 5ஜி களமிறங்கி இருக்கிறது. இந்த சிப்செட்டுடன் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஓஎஸ் அப்டேட்களை பெரிதாக எதிர்பார்க்க முடியவில்லை.
இருப்பினும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. 8.6 எம்எம் தடிமன் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
இந்த 6000mAh பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 210 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) கொண்ட மாடலாக இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைத்து இருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் உள்ளது.
இதுபோக வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) ஆகிய கனெக்டிவிட்டி சப்போர்ட்கள் கிடைக்கின்றன. இந்த எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனை காஸ்மிக் லாவெண்டர் (Cosmic Lavender), நார்டிக் ப்ளூ (Nordic Blue) மற்றும் பீச் பிங்க் (Peach Pink) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications